ICBT நிறுவனத்தின் புதிய கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
(லியோன்)
தனியார் உயர் கல்வித்துறையில் முன்னோடியாக திகழும் ICBT நிறுவனத்தின் புதிய கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
. தனியார் உயர் கல்வித்துறையில் முன்னோடியாக திகழும் ICBT நிறுவனத்தின் புதிய கிளை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது
கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தினை நிறைவு செய்த மாணவர்கள்
தொடர்ந்து கல்வியினை தொடர முடியாமல் வேலை
வாய்ப்பினை எதிர் பார்த்திருக்கும் மாணவர்கள் தமது கல்வித்துறைக்கு ஏற்ப பாடநெறிகளுக்கான சர்வதேச தரத்திலான அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் விதமாக ICBT நிறுவனம் நாடளாவிய ரீதியில் சர்வதேச தரத்திலான கல்வி சேவையினை மேம்படுத்தி வருகின்றது .
இதன் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான
தமது கிளையினை நிறுவன பணிப்பாளர் வைத்தியர் மொஹான் பத்திரணவின் ஆலோசனைக்கு அமைவாக புதிய கிளையினை மட்டக்களப்பு
கல்முனை வீதி ,கல்லடியில் இன்று (22) வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது .
இந்த புதிய கிளையின் திறப்பு விழா நிகழ்வில் நிறுவன உத்தியோகத்தர்கள்
, மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்