Breaking News

போலியான கடவுச்சீட்டு போலியான குவைத் விசா : 103 கடவுச்சீட்டுகள் சிக்கின


கடந்த ஜூன் 03ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட பெண் வழங்கிய தகவலின்  அடிப்படையில்,  இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 103 கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுளதாகவும் இது தொடர்பில், அம்பாறையைச் சேர்ந்த நபர்ரைக் கொழும்பில் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்போலியன போலியான கடவுச்சீட்டு மற்றும் போலியான குவைத் விசாவினை உபயோகித்தது குவைத் செல்லமுயன்ற பெண் ஒருவர் விமான நிலையத்தில் வைத்தது கடந்த ஜூன் 03 அன்று கைதான  அப்பெண்ணிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போது, போலியானமுறையில் கடவுச்சீட்டுகள், விசாக்கள் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள ஆவணங்களை போலியாக தயாரித்து, பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோதமான வியாபாரம் தெரியவந்துள்ளதாகவும் இதன் சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் அம்பாரையை வசிப்பிடமாகக் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய  எதிர்வரும் 29ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.