WWE அமைப்பு மீது வீரர்கள் வழக்கு..
உலக குத்துச்சண்டை பொழுதுபோக்கு (டபிள்யூடபிள்யூஇ-WWE) போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் எதிர்காலமே பாதிக்கப்படுவதாக கூறி, அந்த அமைப்பின் மீது முன்னாள் வீரர்கள் பலர் சேர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளனர்.
ஜிம்ஜி 'சூப்பர்ப்ளை' ஸ்னுகா, ஜோசப் 'ரோட் வாரியர் அனிமல்' லவுரினாயிடிஸ், பவுல் 'மிஸ்டர்.வொன்டர்புல்' ஒர்ன்டோர்ப் உள்ளிட்ட முன்னாள் குத்து சண்டை பிரபலங்கள், கொன்னேக்டிகட், பெடரல் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
டபிள்யூடபிள்யூஇ தலைவர் வின்ஸ் மெக்மகோன் இந்த வழக்கின் பிரதிவாதியாகும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், வேண்டுமென்றே தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது என்று டபிள்யூடபிள்யூஇ மீது புகார் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டில் காயமடைவோருக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் பல வீரர்கள் மூளை சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கால்பந்தாட்டம், ஹாக்கி போன்றவற்றில் இதேபோல காயம் ஏற்படும் என்றாலும் கூட, "எப்படி அடிக்க வேண்டும், அடிபட வேண்டும் என்பதை எழுதி கொடுத்து நடத்துவது டபிள்யூடபிள்யூதான்" என்பதால் இந்த பிரச்சினையில் முழு பொறுப்பாளி அந்த அமைப்புதான் என்பது வழக்கின் சாரம்சமாகும். இதனிடையே, புதுப்பொலிவுடன் ரா மற்றும் ஸ்மேக் டவுன் வீரர்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளனர்