அமெரிக்காவில் கருப்பின நபரை சுட்டுக்கொன்ற போலீஸ்; விடியோ
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பேட்டன் ரூஜ் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடையின் வெளியே கருப்பினத்தைச் சேர்ந்த ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) என்பவர் சி.டி. விற்பனை செய்துவந்தார்.
இவர் செவ்வாய்க்கிழமை அன்று கடையில் இருந்தபோது அவரை போலீசார் திடீரென சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அவரை பிடித்து கீழே தள்ளி சுட்டுக்கொன்றுள்ளனர். கடைக்கு வெளியே உள்ள பார்க்கிங் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்டெர்லிங்க சுட்டுக்கொன்றதும் அவரது பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை போலீசார் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தாங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லிங்கை சுட்டுக்கொன்ற இடத்தில் அஞ்சலி செலுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், கருப்பினத்தவர்களுக்கு எதிராக போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினர். மேலும், போலீசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது. விடியோவை காண இவ் இணைப்பை கிளிக் செய்யவும் http://www.reuters.com/article/us-louisiana-police-idUSKCN0ZM0BL