Breaking News

மார்கழியில் சமந்தாவை மணக்கும் நாக சைதன்யா

வரும் டிசம்பர் மாதம் சமந்தா - நாக சைதன்யா திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

சமந்தா - நாக சைதன்யா காதலிப்பது குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகார்ஜுன் இதுவரை கருத்து எதுவும் கூறாமலிருந்தார். இப்போது முதல்முறையாக, ஆம் என்னுடைய மகன் ஒருவரை காதலிக்கிறான் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

சமந்தாவை மருமகளாக்கிக் கொள்ள நாகார்ஜுன் சம்மதித்திருப்பதை அவரது வார்த்தைகள் உறுதி செய்துள்ளன. 

சமந்தா நடித்து வரும் படங்கள் முடிந்த பின் டிசம்பரில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்