அவுத்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை அகதி மர்மமான முறையில் மரணம் !
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி பகுதியை சேர்ந்தவர் திருவருள்குமார் (36). இலங்கையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. எனவே தமிழ் அகதிகள் பலர் கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர்.
அங்கு தஞ்சம் கேட்டு தங்கியுள்ளனர். அவ்வாறு தங்கிருந்தவர்களில் திருவருள் குமாரும் ஒருவர். இவர் அங்குள்ள விக்டோரியா மாவட்டத்தின் புறநகரில் தங்கியிருந்தார்.
மேலும் அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றினார். இந்த நிலையில் அவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இலங்கையில் வசிக்கும் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இறுதி காரியங்களுக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியும் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய பலர் கடல் வழியாக செல்ல முயற்சிக்கும் நிலையில் இவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.