Breaking News

கண்டியில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்!

க.பொ.த சா/த பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி என்ற போர்வையில் கண்டியில் 4 வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த தனியார் வதிவிட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவிகள் பலர் பாலியல், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேற்படி முகாமானது 3 மாதங்களுக்கு நடத்தப்படுவதாகவும்  இதுவரை பலர் இங்கு பயிற்சிபெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை இங்கு பயிற்சிக்கென பங்கேற்ற 17 மாணவிகளில் 10 பேர் அங்கிருந்த கடும் பாதுகாப்பு முறைகளையும் மீறி தப்பிச் சென்று காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர்.

மேலும் அவ்வழியே வந்த பிரதேசவாசி ஒருவரின் உதவியுடன் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியவுடன் கண்டி பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பராமரிப்புப்  பிரிவினர், உடனடியாக ஸ்தலத்துக்கு விரைந்து மாணவிகளை பொறுப்பேற்றதுடன் அவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுதியபோது, இந்நிலையமானது மாணவிகளை  பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கண்டி போலீசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.