Breaking News

கிழக்கில் முதலமைச்சரால் மீனவர்களுக்கு இலவசமாகத் தோணிகள்

ஏறாவூர் ஆற்றங்கரை மீனவர் கூட்டுறவுச் சங்க மீன்பிடியாளர்களுக்கு கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமட் மாகாண நிதி ஒதுக்கீட்டிலிருந்து இருந்து ஒருதொகை தோணிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பிரதேசத்தைப் பொறுத்தவகையில் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்துக்குத் தேவையான வருமானங்களை மீன்பிடித் தொழில் மூலமாகவே பெற்றுக்கொள்கின்றனர். இவ்வருமானமானது இவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை. இதனைக் கருத்தில் கொண்ட முதலமைச்சர் இவர்களுக்குத்தேவையான வசதிகளை செய்துகொடுக்கும் பொருட்டு முதற்கட்டமாக இவ்வருட தனது நிதி ஒதுக்கீட்டின்மூலம்  சுமார் 20 தோணிகளை வழங்க உத்தேசித்து அடுத்தமாதம் இத்தோணிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.