Breaking News

பிரான்சில் தாக்குதல் திட்டம் தீட்டிய 16 வயது சிறுமி கைது!

பிரான்சில் இம்மாதம் மட்டும் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 16 வயது சிறுமியும் அடக்கம்.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிமார்டு தெரிவிக்கையில்,
கடந்த 6 மாதங்களில் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரெஞ்சு போலீசார் கைது செய்துள்ளனர். இது கடந்த 2015ம் ஆண்டை விட அதிகமாகும்.

எனினும் கைது செய்யப்பட்டவர்களின் விவரம் இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. கைது செய்யப்பட்டவர்களில் 16 வயது சிறுமியும் உள்ளார். இவர் பிரான்சில் ஜிகாதி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஐஎஸ் குழுவில் தகவல் பரிமாற்ற நிர்வாகியாக திகழ்ந்து வந்ததும் தெரியவந்தது என்றார்.