Breaking News

காத்தான்குடி விவசாய விரிவாக்கல் போதனாசிரியர் பிரிவில் நகர்புற தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும்

( என்டன்)

மட்டக்களப்பு   விவசாய  திணைக்களத்தினால்  மட்டக்களப்பு மத்திய  வலய   விவசாயத்தினைக்கள  போதனாசிரியர்  பிரிவுகளில்  வீட்டுத்தோட்ட  பயிர்செய்கையினை  மேற்கொள்வதற்கும்   வீட்டுத்தோட்ட   உற்பத்தியாளர்களின்  வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும்  நோக்குடனும்  பல ஊக்குவிப்பு   திட்டங்களை  மேற்கொண்டு  வருகின்றனர் .

இதன் கீழ்   மட்டக்களப்பு  காத்தான்குடி  விவசாய   விரிவாக்கல்          போதனாசிரியர்  பிரிவின்  காத்தான்குடி-அல்கிரா வித்தியாலயத்தில் நகர்புற தோட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்ட  பயிர்ச்செய்கையினை  மேற்கொள்வதற்கான  வீட்டுத்தோட்ட உற்பத்தி உபகரணங்களும்  வழங்கும்  நிகழ்வும்   நடைபெற்றது .

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் வீட்டுத்தோட்டத்தின் முக்கியத்துவம் வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்வதற்கான உத்திகள் ,அதன் பயன்பாடுகள் போன்ற விளக்கங்களையும் சத்துருக்கொண்டான்  விவசாய பண்ணை முகாமையாளர் நிசாந்தன்  கலந்துகொண்டு வழங்கினார்

இந்நிகழ்வு  காத்தான்குடி  விவசாயப் போதனாசிரியார்   திருமதி . கே .ரவிசங்கர்   தலைமையில்  காத்தான்குடி அல்கிரா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  உதவி விவசாய பணிப்பாளர் .வி. பேரின்பராஜா ,காத்தான்குடி அல்கிரா வித்தியாலய அதிபர் எம் .எ.ஜி .எம் . ஹகீம் ,காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எ .சி . எ .அப்fகார் பிரதேச கல்விப்பணிப்பாளர் . எம் .சி . எம் .எ . பதுர்தீன், பாடசாலை மாணவர்கள் விவசாய திணைக்கள  போதனாசிரியர்கள்  பாடசாலை ஆசிரியர்கள்  மற்றும்  வீட்டுத்தோட்ட  பயனாளிகள்  கலந்துகொண்டனர் .