Breaking News

கொரிய நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பு விஜயம்


(லியோன்)

கொரிய நாட்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மட்டக்களப்பு மாநகர  சபைக்கு சுற்றுலா விஜயத்தை  மேற்கொண்டனர் .


மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி மற்றும் அலுவலக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான   கொரிய பல்கலைக்கழக  மாணவர்களுடனான கலந்துரையாடல் மாநகர சபை ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில் மாநகர அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது .   

மட்டக்களப்பு மாவட்ட ஏசியன் பவுண்டேசன் நிறுவன ஒழுங்கமைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கொரிய பல்கலைகழக மாணவர்கள் , இலங்கை ஏசியன் பவுண்டேசன் நிறுவன பிரதிநிதிகள் , கொரிய நாட்டு பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர  சபைக்கு கல்வி சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்துள்ள  கொரிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ,கொரிய நாட்டு பிரதி நிதிகளுக்கும் மாநகர ஆணையாளரினால்  நினைவு சின்னங்களும் ,மாநகர சபையின் அபிவிருத்தி செயல்திட்டங்கள் தொடர்பான இறுவெட்டுகளும்  வழங்கி வைக்கப்பட்டது