புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு 06.08.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி எ .தேவதாசன் தலைமையில் இடம்பெற்றது .
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும் , விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது .
கொடியேற்ற நவநாள் திருப்பலியை மட்டக்களப்பு தேத்தாதீவு பங்கு தந்தை நிர்மல் சூசைராஜ் அடிகளார் தலைமையில் ஒப்புகொடுக்கப்பட்டது
திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருச்செபமாலையும் ,திருப்பலியும் இடம்பெறும்.
எதிர்வரும் 14.08.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணிக்கு திரு அன்னையின் திரு உருவம் பவனியாக வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் விசேட திருப்பலியும் ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெறும் .