தந்தையிடம் கப்பம் கோரி சகோதரியை கடத்திய சகோதரன்...
கம்பஹாவைச்சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன், கப்பம் கோரி தனது சொந்த சகோதரியைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த சிறுவன் மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாவான், இவன் இசைக்குழுவொன்றை அமைப்பதற்கென தனது சகோதரியைக் கடத்திச் சென்று தனது நண்பனின் வீட்டில் மறைத்தது வைத்தது விட்டு மாற்றுக் குரலில் தந்தையிடம் சுமார் 700,000 ரூபாய் கப்பம் கோரியதாகக் கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.