Breaking News

ஒலிம்பிக்கில் இருந்து விலகிய பிரையன் சகோதரர்கள்...

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் விளையாட நடப்பு சாம்பியன் அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையனும், மைக் பிரையனும் தகுதி பெற்றிருந்தனர். வலுவான ஜோடியான இவர்களுக்கு மீண்டும் தங்கம் வெல்ல வாய்ப்பிருந்த நிலையில், திடீரென ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளனர். ‘ஜிகா’ வைரஸ் பயம் குறித்து நேரடியாக சொல்லாமல், குடும்பம் மற்றும் உடல் ஆரோக்கியமே முக்கியம் அதை கவனத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதே போல் காயம் பிரச்சினை காரணமாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் விலகியதால், சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடும் முடிவை கைவிட்டுள்ளார். அவர் பெண்கள் இரட்டையரில் மட்டும் சக நாட்டவர் டைமியா பாக்சின்ஸ்கியுடன் இணைந்து ஆட உள்ளார்.