Breaking News

ஒரே வாரத்தில் முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீங்கச்செய்யலாம் !

உடலின் சில பகுதிகள் மட்டும் கருமையாக இருக்கும். இதற்கு அப்பகுதிகளில் சுருக்கங்கள் அதிகம் இருப்பதால், இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்து, அது அப்படியே தங்கி, அப்பகுதியை கருமையாக்கி விடுகின்றன. அதுமட்டுமின்றி வேறு சில காரணங்களும் உள்ளன. அப்படி உடலில் கருமையாக இருக்கும் பகுதிகள் முழங்கால், முழங்கை, கழுத்து, அக்குள் போன்றவை.

இப்படி கருமையாக இருக்கும் பகுதிகளை வெள்ளையாக்க பலர் கரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டே அக்கருமையைப் போக்கலாம். இங்கு அந்த இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மை கொண்டது.

இது எப்பேற்பட்ட கருமையையும் போக்கும். அதற்கு எலுமிச்சை சாற்றினை காட்டனில் நனைத்து, கருமையாக உள்ள பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.