Breaking News

மகனின் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கென தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலம்விடும் வீரரினது உருக்கமான வேண்டுகோள் !!

போலந்து நாட்டைச் சேர்ந்த வட்டெறிதல் வீரர் பயோட்டர் மலாச்சோவ்ஸ்கி(33).இவர் ரியோ ஒலிம்பிக்கில் வட்டெறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அவர் தெரிவித்திருப்பதாவது,
ஒலிக் என்ற சிறுவனின் தாய் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அவரது ஒரே மகனுக்கு கண் புற்றுநோய் இருப்பதால் அவரை காப்பாற்ற என்னிடம் வசதி இல்லை,.எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.அந்த தாயின் அன்பு உள்ளத்திற்காக நான் எனது ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை ஏலம் விடுகிறேன். அதில் கிடைக்கும் பணம் அவரது மகனின் சிகிச்சை செலவுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
உண்மையாகவே, நான் தங்கம் பெறவே முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. வெள்ளிதான் வெல்ல முடிந்தது. ஆனால், தற்போது இந்த சிறுவனுக்கு இந்த வெள்ளி பதக்கம் உதவினால், நான் தங்கம் வென்ற மகிழ்ச்சி அடைவேன் என்று உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் உதவும் நல்லுள்ளங்கள் அந்த சிறுவனுக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். இதனால், சிறந்த விளையாட்டு வீரனாக அவர் உயரத்தில் வைத்து மதிக்கப்படுகிறார்.

அவர் தான் பெற்ற பதக்கத்தை ஏலம் விட்டு சிறுவனை காப்பாற்ற நினைத்த அந்த விளையாட்டு வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அடப்பாருய்யா.. நம்மூரு சிந்து மாதிரி ரொம்ப புகழ் அடைஞ்சிருவாரோ..? வாழ்க அவரது நல்ல உள்ளம்.!