Breaking News

திருட்டு போயுள்ள இந்திய நீர்மூழ்கிக்கப்பல் இரகசியம் !!

மேலும் இது தொடர்பாக பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கபட்பட்டுள்ளதாவது,
பிரான்ஸ் அரசில் இருந்து ஸ்கார்பின் ரகசியம் கசியவில்லை. அது கான்ட்ராக்டர்களால் திருடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. இது வரை பிரான்ஸ் அரசால் ஸ்கார்பின் குறித்த செயல்பாட்டு விளக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஆஸ்திரேலிய பத்திரிகையில் இந்த ரகசிய அம்பலம் வெளி வந்ததற்குப்பின்னர்,இது தொடர்பாக இந்தியாவும் பிரான்சும் திறந்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

நிச்சயமாக இந்த ரகசியம் கசியவில்லை. அது திருடப்பட்டுள்ளது. இந்த அலட்சியமான நிலை குறித்து அதிகாரிகள் மத்தியில் தீவிர விசாரணையும்,விளக்கங்களும் கோரப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால், ஸ்கார்பின் நீர் மூழ்கி கப்பல் தொடர்பாக இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்த ரகசியம் திருடப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் செயல்பாட்டு விளக்கங்களை பெறும் அதிகாரிகள் மட்டுமே இதில் நேரடியாக தொடர்புடையவர்களாக இருந்து வந்தனர்.

இருப்பினும் இந்த ரகசிய திருட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.