Breaking News

இறந்த தனது மனைவியின் உடலத்தை தோளில் சுமந்தபடியே 10 கி.மி சென்ற கணவன் !!

ஒடீஷா மாநிலத்தில் நேற்று மனைவியின் சடலத்தை தனது மகளுடன் தோளில் சுமந்து சென்ற மனிதரின் லைவ் வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் உள்ள சேனல்களில் பரபரப்பாக ஒலிபரப்பப்பட்டது. பலர் அந்த காட்சியை பார்த்து கண்ணீர் விடாத குறைதான்.

ஒடீஷா மாநிலம்,காலந்தி மாவட்டம்,பவானிபட்டினா டிபி ஆஸ்பத்திரியில் தனாமஜி(42) என்பவர் தனது 12வயது மகளுடன் மனைவியை டிபி சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அவர் கூலி வேலை செய்து பிழைப்பவர். சிகிச்சையில் அவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் மனைவியை 60கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியை அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் மறுத்துவிட்டனராம். என்னால் பணம் கொடுத்து ஆம்புலன்ஸ் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்று கெஞ்சிக்கேட்டுள்ளார். ஆனால் அந்த மனசாட்சி இல்லாதவர்கள் மறுத்துவிட்டனர்.

அதனால் அவரே தனது மனைவியின்உடலை சேலையால் சுற்றிக்கட்டினார். தனது மகளையும் அழைத்துக்கொண்டு ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். இந்த தகவல் டிவி மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு பரவவே, அவர்கள் அனைத்தையும் லைவ் செய்தனர். இந்த காட்சிகள் நேற்று நாடு முழுவதும் உள்ள டிவிக்களில் வலம் வந்தது. 

மாஜி தனது மனைவியின் உடலை தூக்கிக்கொண்டு 10 கி.மீட்டர்சென்றுவிட்டார். பின்னர் செய்தியாளர்கள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றதால் வாகன வசதி கிடைத்து உடலை கொண்டு சென்றார். இருப்பினும் ஒரு சாதாரண மனிதனை 10 கி.மீட்டர் தூரம் தனது மனைவியின் உடலை தூக்கிச்செல்ல வைத்த கொடுமையை அவர் எவ்வளவு வேதனையாக எடுத்துக்கொண்டிருப்பார்? அவர் தனது மனைவியை எந்த அளவுக்கு நேசித்திருப்பார் பாருங்கள்.

பின்னர் இதுகுறித்து விசாரித்த சப்க-லெக்டர் திரிபாதி ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கடுமையாக கண்டித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் கவனத்திற்கு சென்றது. அவர் உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து இறந்தவர்களின் உடலை வீடுகளுக்கு கொண்டு செல்லும் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை உடனடியாக அறிவித்துள்ளார்.