Breaking News

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை வழங்கும் வடகொரிய அரசு !!

பிரேசிலில் நடந்து முடிந்த 32 வது ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாட்டு வீர்ரகளை கவுரவித்து வரும் நிலையில் வடகொரியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் தற்போது அந்நாட்டு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது.

ரியோ ஒலிம்பிக்கில் வடகொரியா சார்பாக மொத்தம் 31 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 2 தங்கம் உள்பட மொத்தம் 7 பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து தங்கள் நாட்டு வீரர்களை  மிக உற்சாகமாக வரவேற்தனர். ஆனால் வடகொரிய நாட்டு அரசாங்கம் மட்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் நிலக்கரி சுரங்கத்தில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய வீரர்கள் நாட்டிலிருந்து கிழம்பும் முன் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து 5 தங்கம் உள்பட 17 பதக்கங்களுடன் தான் நாடு திரும்ப வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தாகவும் ஆனால் வடகொரிய வீரர்கள் 7 பதக்கங்களை மற்றுமே வென்றுள்ளதால் அவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ளது.

7 பதக்கங்கள் வென்ற வீரர்கள் மட்டும் இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.