Breaking News

அண்மைக்கால நடைபெற்ற போட்டியில் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிவிட்டார் விஜய்!

நடிகர் விஜய் நடிகர் சூர்யா இருவருக்குள்ளும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங்  இருக்கிறது.

ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் களத்தில் இறங்கத் தானே வேண்டும்?

இவர்களுக்குள் நடிப்பில், கதைத் தேர்வில், டைட்டில் வைப்பதில் என எல்லாவற்றிலும் போட்டி இருப்பது போல வியாபாரத்திலும்.. கலெக்ஷனிலும்கூட போட்டி நிலவுகிறது.

ஆமாம்! நம்ம ஊரில் எப்படி விஜய்-அஜித் என  நீயா நானா போட்டி இருக்குமோ, அதேபோல் கேரளாவில்  விஜய்-சூர்யாவிற்கு தான் கடும் போட்டி!! ரசிகர்களும் அவர்களுக்கு அதிகம்!!!

’தெறி’ கேரளாவில் ரூ 16 கோடி வசூல் செய்ய,  சூர்யாவின் சமீபத்திய படமான ’24’ அங்கே  சுமார் ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது இவர்களின் அடுத்த படத்தின் கேரளா வியாபாரம் முடிந்து விட்டது.

இந்த முறை விஜய்யின் படம்தான் லீடிங்.

சூர்யாவை பின்னுக்கு தள்ளி விட்டார் விஜய்.

சூர்யாவின் சிங்கம்-3 ரூ 4 கோடிக்கு  வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது (7ம் அறிவு  படம் வந்த நேரத்தில் சூர்யா படத்திற்கு கேரளாவில்  அதிக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது). ஆனால்,இப்போது, விஜய்யின் புதிய திரைப் படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை ஐ.எஃப் ஏ ஆர். என்ற நிறுவனம்  கேரளாவில் ரூபாய்.6.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

அதாவது கேரள ரேஸில் முந்தி விட்டார் விஜய்!