Breaking News

போதையில் போலீஸ் வேனிலேயே மோதிய அருண் விஜய் !

நடிகர் அருண் விஜய் ஓட்டி வந்த கார் நுங்கம்பாக்கம் போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இன்று, அதிகாலை பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனும், நடிகருமான அருண் விஜய் நுங்கம்பாக்கம் பகுதியில் காரை ஓட்டி வந்துள்ளார்.

அப்பொழுது, எதிரே நுங்கம்பாக்கம் காவல்துறையினரின் வாகனமும் வந்துள்ளது. எதிரே வந்த வாகனம் மீது நடிகர் அருண் விஜய் கார் மோதியுள்ளது. வாகனத்தில் இருந்த அருண் குமாரை விசாரித்ததில் அவர் மதுபோதையில் இருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.