Breaking News

பாக்கிஸ்தானானிடமிருந்து பொத்துவில் விவசாய அமைப்பிற்கு உழவு இயந்திரம் !

பாக்கிஸ்தான் இலங்கை நட்புறவை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய அமைப்புகளுக்கு உழவு இயந்திரங்களையும், விவசாய உபகரணங்களையும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம்
வழங்கிவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இன்று (23) காலை கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகரில்லத்தில் வைத்து உழவு இயந்திரம் வழங்கிவைக்கப்பட்ட போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறுகையில் இந்த சிறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கும் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்து, இவ்வாறான உதவிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருக்கின்ற விவசாய அமைப்புகளுக்கும் வழங்கிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமதின் சிபாரிசின் பெயரில் பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர்  செய்யட் சகீல் ஹுஸைன் (Syed Shakeel Hussain) மற்றும்  பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சர்ப்ராஸ் அஹமட்கான் சிப்றா ( Dr. Sarfras Ahamed khan supra) அகியோரால் பொத்துவில் பாலயடிவட்டை கமக்காற அமைப்பின் தலைவர் சிக்கந்தர் செயினுடீன் மற்றும் அதன் உறுப்பினர்களிடம் இந்த உழவு இயந்திம் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கலந்து சிறப்பித்தார்.