Breaking News

அடம் பிடித்து சாதித்தார் சினேகா…

நடிச்சா… நான் ஹீரோயினாத்தான் நடிப்பேன் என்று சொன்னவர் நடிகை சினேகா, 

மார்க்கெட்டு இருக்கிறதே அல்லாடுதாம், அசந்தது, துள்ளிக்குதிக்கிதாம் கதையா…ஆனானப்பட்ட ஸ்ரேயாவே அல்லு பறக்க, சிம்புக்கு அம்மாவா ஆக்ட் கொடுக்குது. கல்யாணம் பண்ணி , ஒரு குழந்தையையும் பெத்துட்டு …ஹீரோயினாகவேதான் இருப்பேன்னா…அதுக்கு ஜோதிகா போல சூர்யாவை மாதிரி ஒரு ஹீரோவைதான் கட்டியிருக்கணும். ரெண்டு புள்ள பெத்தாலும், உடம்பு சைச குறைச்சு, ஆக்டிங் க்ளாஸ் போக வச்சி சொந்த படம் எடுக்கறாரு கட்டிகிட்ட மவராசன். நம்ம கதையில் இதெல்லாம் நடக்காதுன்னு…ஹீரோயினா நடிப்பேன்னு சொன்ன சினேகா… தனியார் தொலைக்காட்சி ம் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாம். அப்படி வாங்க வழிக்கு…

தமிழில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காத நிலையில், சேட்டன்கள் சினேகா வுக்கு ஆதரவு தர ஆரம்பித்து உள்ளனர். முதல் படமாக 6 ஆண்டுகள் கழித்து,ஹனிப் அதேனி இயக்கும் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் மலையாள படமொன்றில் சினேகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்