Breaking News

அனுஷ்கா மேல் செம கடுப்பில் இயக்குனர் …தள்ளிப்போகும் பாகுபலி2…

பாகுபலி 2 -க்கு ஒரு பெரிய ஓபனிங் காத்துக்கொண்டு இருக்கிறது. உலக அளவிலேயே இப்படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக்கிடக்கிறது.பாகுபலி 2-ன் ரிலீஸ் ஏப்ரல் 14, 2017 என்றும் அறிவிக்கப்பட்டது . ஆனால்,ராஜமௌலிக்கு இந்த அனுஷ்கா கொடுத்த டென்ஷனால் ரிலீஸ் தேதியே தள்ளிப் போகலாம் என்று சொல்லப்படுகிறது.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி போல சுற்றி வந்த அனுஷ்கா, பாகுபலி க்கு பிறகு இஞ்சி இடுப்பழகி என்று ஒரு படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு கிராபிக்ஸ் செய்துக்கொள்ளுகிறோம் என்று சொல்லியும், தான் ஒரு யோகா மாஸ்டர் என்பதாலும்…நான் ரியலா உடம்பை ஏத்தி நடிச்சிட்டு, குறைக்கிறேன் பார் என்றார் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி சுமாராக போனது. ஆனால், ஏற்றிய குண்டு கொஞ்சம் கொஞ்சமா தான் போகுதாம். இன்னமும் கொஞ்சம் பூசினார் போல காணப்படும் அனுஷ்கா தான் பாகுபலி 2 -ல் முக்கிய கதாபாத்திரம். அம்மணியை காமிராவில் பார்த்து அதிர்ந்த ராஜமௌலி கிளைமாக்ஸுக்கு நீ உடம்ப குறைச்சாதான் , எடுக்க முடியும் என்று சொல்லிவிட, இப்போ அம்மணி உண்மையிலே இஞ்சி இடுப்பழகி ஹீரோயின் போல ஏக வெய்ட் குறைப்பு நடவடிக்கையில் உள்ளார்.

அனுஷ்கா உடம்ப குறைத்த தான், பாகுபலி 2 ஷூட்டிங்கே என்பதால், டென்ஷனில் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி 2 ரிலீ ஸ் தள்ளிப்போய்விடுமோ என்று கவலையில் இருக்கிறாராம்.

இஞ்சி இடுப்பழகியால் பாகுபலியை …நோகுபலியாக்கிய அனுஷ்கா…..