Breaking News

தமிழ் அரசியல் கைதிகளில் சிலர் விடுவிக்கப்படலாம் !!

நாடுபூராகவுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது தொடர்பில் முடிவினை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னராக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் சிறு குற்றசாட்டுக்களை கொண்ட சந்தேக நபர்கள், இதுவரையிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் போன்றோர் விடுதலைச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட காலாந்துறையாடலில் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, சட்ட ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.  குறித்த கலந்துரையாடலில்  வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சந்தேக நபர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து விடுதலை அளிப்பது குறித்தது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.