Breaking News

தனது சாவை தாமே நேரடி ஒளிபரப்பு செய்த சாகச வீரர் !

இத்தாலியை சேர்ந்தவர் ஆர்மின் ஸ்கேமிடர் (28). இவர் பொதுமக்களிடையே பல்வேறு சாகசங்களை செய்து உள்ளார்.

இந்த நிலையில் ஆல்ப்ஸ் மலை முகட்டில் சாகசம் செய்வதாக அறிவித்தார். அதன்படி ஆல்ப்ஸ் பகுதியில் உள்ள மலை முகட்டில் குதித்து சாகசம் செய்வதை பேஸ்புக் வாயிலாக பொதுமக்களுக்கு ஒளிபரப்பு செய்தார்.

தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா வாயிலாக தன்னை பேஸ்புக்கில் தொடருபவர்களுக்கு இந்த சிறப்பு சாகசத்தை நேரடி ஒளிப்பரப்பு செய்தார்.

எதிர்பாராதவிமாக இந்த சாகச விபத்தில் உயிரிழந்தார்.மலை முகட்டில் இருந்து கீழே குதித்த அவர் நிலைகுலைந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை நேரலையில் பார்ததவர்கள் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தனர்.

என்ன நடந்தது என்பதே அவர்களுக்கு தெரியவில்லை. இறுதியில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.