உடலில் tattoo வரைய விருப்பமா ..? புற்றுநோய் அபாயம் இருக்கு அவதானம் !
உடலில் பலர் டாட்டு வரைந்து கொள்வது தற்காலத்தில் பேஷனாக கருதப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் டாட்டு வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால்,அழகுக்காக வரையப்படும் இந்த டாட்டுவினால் ஆபத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஐரோப்பிய ரசாயன அமைப்பு, இதை நீண்ட காலமாக ஆய்வு செய்து புற்று நோய் எற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இந்த டாட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், உடலில் அலர்ஜி ஏற்படுத்துவதுடன்,தொடர்ந்து அபாயகரமான தோல் நோய்களை உண்டாக்குகறது.மேலும், புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றது.
டாட்டு தயாரிக்கப்படும் மையில் குறிப்பாக சிவப்பு மை தயாரிக்க பயன்படும் மையில் அதிக நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நச்சுத்தன்மை மைகளே புற்றுநோயை உண்டாக்கும் என்று ஐரோப்பிய ரசாயன அமைப்பு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. ஆகவே, டாட்டு பிரியர்களே! கொஞ்சம் உஷாரா…இருங்க!