Breaking News

சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைக்குக்கான ஐ.நா ஆய்வதிகாரி இலங்கை வரவுள்ளார்

சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட ஆய்வதிகாரி றிட்டா ஐஸாக், எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றத்து. இவரது வருகையானது எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி தொடக்கம்  20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. என, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில், றிட்டா ஐஸாக்கினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பல்வேறு பிழைகள் காணப்பட்டதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. பேரவையில் சமர்ப்பிக்கப்படும் இவ்வாறான அறிக்கையில், தவறானதும் உண்மையற்றதும் பிழையாக வழிநடத்துவதுமான மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஏமாற்றமடைவதாக, இலங்கை அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போது இடம்பெயவிருக்கும் அவரது விஜயம் தொடர்பாகக் கருத்துத் வெளியிட்டுள்ள அரசாங்கம், 'சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட பிழையான மேற்கோள்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது, சிறுபான்மையினரின் பிரச்சினைக்கான ஐ.நா விசேட ஆய்வதிகாரியின் இலங்கை விஜயத்தை நாம் வரவேற்கின்றோம் எனவும் விசேட ஆய்வதிகாரியின் விஜயம், நாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடன் கலந்துரையாடி, உண்மையான தகவல்களைப் பெற வாய்ப்பாக அமையும்' எனவும்  தெரிவித்துள்ளது.