Breaking News

உசைன் போல்டின் மன்மத லீலைகளால் கடுப்பான காதலி !!

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கங்களை குவித்த தடகள வீரர் உசைன் போல்ட், பிற பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அவரது நீண்ட நாள் காதலியான மொடல் அழகி கசி பென்னட் உசைன் போல்ட்டின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாள் தனது 30வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது நடன கிளப்பிற்கு சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர் ஆபாச நடனம் ஆடுவது போன்ற காட்சி வெளியானது.

இதனையடுத்து மற்றொரு பெண்ணுடன் அவர் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

படுக்கையை பகிர்ந்த அந்த பெண் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஜேடி துர்தே என்பதும், அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள இரவு நேர கிளப்பிற்கு சென்ற போல்ட் 10 பெண்களுடன் விடியவிடிய ஆட்டம் போட்டுள்ளார்.

உசேன் போல்ட் 26 வயதாகும் மொடல் அழகி கசி பென்னட் என்பவரை காதலிப்பதாக, அவரின் சகோதரி சமீபத்தில் தான் கூறியிருந்தார்.

இந்த நிலையில் உசைன் போல்ட்டின் இந்த மன்மத லீலைகள் அவரது காதலியான கசி பென்னட்டை கடுப்பாக்கியுள்ளது. இதனால் அவர் சமூகவலைதளங்களில் கடுப்பாக கருத்து வெளியிட்டு வருகிறார்.

உசைன் போல்ட் பற்றி வெளியாகி வரும் மீம்ஸ்களுக்கு கசி பென்னட் லைக் போட்டு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

கசி பென்னட் அருகில் கூட வர முடியாத பெண்ணுடன் ஒரு இரவை கழித்து வாழ்க்கையை வியாபாரமாக்கிவிட்டதாக உசேன் போல்டுக்கு ஒரு பெண் அனுப்பிய டுவிட்டையும், கசி பென்னட் லைக் செய்துள்ளார்.

உசைன் போல்ட் மீது அவரது காதலியான கசி பென்னட் கடுப்பில் உள்ள நிலையில், அவரை பேட்டி எடுக்க அந்நாட்டு ஊடகங்கள் போட்டி போட்டு வருகின்றன.