Breaking News

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் 2,200 குடும்பங்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல் !!!

சென்ற மே மாதம் பெய்த கடும் மழையையடுத்து தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் முன்னெடுத்த ஆய்வுகளின் அடிப்படையில் புதிதாக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் இனங்காணப்பட்டதாக நிறுவகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் கேகாலை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இருந்து 2,200 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது. மற்றும் குறித்த மாவட்டங்களில் கேகாலை மாவட்டமே மண்சரிவு அபாயம் அதிகம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.