Breaking News

Action King ஜாக்கி சானுக்கு ஆஸ்கார் விருது !!

குங்ஃபூ எனும் தற்காப்பு கலையை சினிமா மூலம் வெளிப்படுத்தி உலக அளவில் மிக பிரபலமான ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான கவுரவ ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 61 வயதை கடந்திருக்கும் ஜாக்கி சான் தனது 8 வயது முதல் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜாக்கி சானின் திரையுலக பயணத்தை  கவுரவிக்கும் வகையில் “Academy of Motion Picture Arts and Sciences” என்னும் நிறுவனம் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கார் விருதை  அறிவித்துள்ளது.

ஜாக்கி சான் உள்பட எடிட்டர் அன்னி கோட்ஸ்,இயக்குநர் லின் ஸ்டால்மாஸ்டர் மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் ஃபிரெடிக் வைஸ்மென் ஆகிய நான்கு பேர் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு  செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கு வரும் நவம்பர் மாதம் 12 ஆம் தேதி நடக்கும் விழாவில் கவுரவ ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

 உலக சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜாக்கி சான் இதுவரை ஒரு முறை  கூட ஆஸ்கார் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.