Breaking News

விஷால் பட ஹீரோயினுக்கு ஒரு கோடியா ?!!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தில் ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது. தெலுங்கு பட ஹீரோயின் ரகுல் ப்ரீத்சிங் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிப்பதற்கு கேட்ட சம்பளம் அதிகமாக இருந்ததாம்.

விஷால் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு அவரே ப்ரீத்சிங்கை முடிவு செய்திருந்ததால் அவர் எவ்வளவு கேட்டாலும் விஷால் கொடுப்பார் என்ற நிலை இருந்தது. தற்போது விஷாலுக்கு தயாரிப்பாளர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கத்திச்சண்டை தயாரிப்பாளரையே இந்தப்படத்தையும் தயாரிக்கச் சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு முடிவாகிவிட்டதாம். இந்த செய்தி கேட்டு தமிழ்பட ஹீரோயின்களுக்கு காதில் புகை கிளம்புகிறதாம். அங்க.. இங்க இருந்து வர்றவளுகளுக்கெல்லாம் கோடி கோடியாம்.. நாங்க தமிழ்பட உலகமே கதின்னு கிடக்கோம்..எங்களுக்கு லட்சங்களாம்.. என்று வயிறு எரிந்து கிடப்பதாக கூறுகிறார்கள்.