Breaking News

பாடசாலைகளுக்கிடையிலான குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை படைத்துள்ளது.


கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நான்கு கட்டங்களாக நடைபெற்ற குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் 309 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், திருகோணமலைக் கல்வி வலயம் 76 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், கல்குடா கல்வி வலயம் 71புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளதாக  மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட குழு விளையாட்டுக்கள் மற்றும் மெய்வல்லுனர் விளையாட்டுகளில் கல்வி வலயங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில்.

மட்டக்களப்பு வலயம் குழு விளையாட்டுகளில் 309 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 88 புள்ளிகளையும்,

திருகோணமலை வலயம் குழு விளையாட்டுகளில் 76 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 63 புள்ளிகளையும்,

கல்குடா  வலயம் குழு விளையாட்டுகளில் 71 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 28 புள்ளிகளையும்,

மட்டக்களப்பு மத்தி  வலயம் குழு விளையாட்டுகளில் 62 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 9 புள்ளிகளையும்,

அம்பாறை  வலயம் குழு விளையாட்டுகளில் 58  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 187 புள்ளிகளையும்,

கந்தளாய்  வலயம் குழு விளையாட்டுகளில் 46  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 71 புள்ளிகளையும்,

திருக்கோவில்  வலயம் குழு விளையாட்டுகளில் 39 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 8 புள்ளிகளையும்,

கிண்ணியா   வலயம் குழு விளையாட்டுகளில் 34  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 98  புள்ளிகளையும்,

கல்முனை  வலயம் குழு விளையாட்டுகளில் 28 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 93 புள்ளிகளையும்,

மட்டக்களப்பு மேற்கு  வலயம் குழு விளையாட்டுகளில் 26 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 43 புள்ளிகளையும்,

பட்டிருப்பு வலயம் குழு விளையாட்டுகளில் 21  புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 211  புள்ளிகளையும்,

தெகியத்தகண்டி  வலயம் குழு விளையாட்டுகளில் 15 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 41 புள்ளிகளையும்,

அக்கரைப்பற்று  வலயம் குழு விளையாட்டுகளில் 14 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 48 புள்ளிகளையும்,

மூதூர்  வலயம் குழு விளையாட்டுகளில் 02 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 62 புள்ளிகளையும்,

சம்மாந்துறை  வலயம் குழு விளையாட்டுகளில் 02 புள்ளிகளும், மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 38 புள்ளிகளையும்,

மகோயா  வலயம் குழு விளையாட்டுகளில் புள்ளிகள் பெறவில்லை  மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 29 புள்ளிகளையும்,

திருகோணமலை வடக்கு வலயம் குழு விளையாட்டுகளில்  புள்ளிகள் பெறவில்லை, மெய்வல்லுனர் விளையாட்டுகளில்  8 புள்ளிகளையும் பெற்றுள்ளன.


கிழக்கு மாகாணக் கல்வி பாடசாலைகளில் குழு விளையாட்டு மற்றும் மெய்வல்லுனர் ஆகிய இரு விளையாட்டுக்களிலும் மொத்தமாக பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயம் குழு விளையாட்டுக்களில்  309  புள்ளிகளையும் , மெய்வல்லுனர் விளையாட்டுக்களில்  88 புள்ளிகளையும் மொத்தமாக 397 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(என்டன்)