Breaking News

சிகரட்டுக்கான VAT வரியினை 15% அதிகரிப்பிற்கு அமைச்சரவையின் அனுமதி!

சிகரட்டுக்காக அறவிடப்படும் VAT வரியை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கும் பீடிக்கான செஸ் வரியினை  2000 ரூபாவிலிருந்து 3000 ரூபா வாக அதிகரிக்கவும் அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் மேலும்  சிகரட் மீதான உற்பத்தி வரியானது ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாட்டில் வருடமொன்றிற்கு 30,000 பேர் புகைத்தலினால் ஏற்படும் நோய்களினால்  உயிரிழப்பதுடன் புகைத்தலினால் நோய் வாய்ப்படுகின்றவர்களுக்காக அரசானது வருடாந்தம் 72 பில்லியன் ரூபாவை செலவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.