Breaking News

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அவரின் நண்பர்களுடன் !

இயக்குனர் மோகன் ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ ஆயுத பூஜை அன்னிக்கு பிரமாண்ட ரிலீஸ். அதற்குள் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கப்போகும் படத்துக்கு வேலையை துவக்கிவிட்டார் மோகன் ராஜா.

அனிருத் இசை, ராம்ஜி ஒளிப்பதிவு என்று உறுதியான இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா, சினேகா, ஃபஹத் பாசில், சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கப்போகிறார் என்று செய்தி வெளியானது.தற்போது ரோபோ சங்கர் ,ஆர்ஜே பாலாஜி ஆகிய இருவரும் இப்படத்தில் இணைகிறார்கள்.

சிவா, ரோபோ சங்கர் ,ஆர்ஜே பாலாஜி மூவரும் நண்பர்கள் என்பது தான் ஹைலைட்.