Breaking News

சென்னை தெருக்களில் பிச்சை எடுத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை எட்டிப் பிடித்த மாணவன்!

ஜெயவேல் (22) சென்னை தெருக்களில் குடும்பத்தின் வறுமை காரணமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர். இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்து முடிக்க போகிறார். வாய்ப்புகள் சிலரை தேடி வரும், சிலர் அமைத்துக் கொள்ள வேண்டும்.

வந்த வாய்ப்பை நழுவவிட்டு அல்லது வாய்ப்பை அமைத்துக் கொள்ளாமல் நழுவிவிட்டு, வாழ்க்கையை நொந்துக் கொள்வது நியாயமில்லை. அந்த வகையில் ஜெயவேல்ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார்.

ஜெயவேலு ஆந்திராவை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பயிர்கள் அழிந்து போன காரணத்தால், ஜெயவேலுவின் குடும்பம், நெல்லூர்-ல் இருந்து சென்னைக்கு கட்டாயத்தின் பேரில் தள்ளப்பட்டது.

கையில் காசு இல்லை, வருமானத்திற்கு வழியும் இல்லை. பசியை போக்க பிச்சை தான் எடுக்க வேண்டும் என்ற நிலை. தன் குடும்பத்துடன் சேர்ந்து ஜெயவேலும் பசியும், குடும்பத்தின் தேவைக்கான காசு சேர்க்க பிச்சை எடுத்தார். 

இளம் வயதிலேயே இவரது தந்தையும் மரணம் அடைந்துவிட்டார். இதற்கு பிறகு இவரது வாழக்கையில் போராட்டம் மிகவும் தீவிரமானது. தந்தையின் மரணத்திற்கு பிறகு தாய் குடிக்கு அடிமையானார்.

ஜெயவேலுவிடம் உடுத்திக் கொள்ள ஒரே ஒரு சட்டை தான் இருந்தது. அது எப்போதும் அழுக்கு படிந்து தான் இருந்தது.

நடைபாதை தான் இவர்கள் உறங்கும் இடம். மழை வந்துவிட்டால், அருகே இருக்கும் கடைகளின் கூரைக்கு கீழே ஒதுங்க வேண்டும் என்ற நிலை வந்துவிடும். அதிலும் போலீஸ் வந்துவிட்டால், அடித்து துரத்திவிடுவார்கள்.

சுயம் டிரஸ்ட் நடத்தி வந்த உமா முத்துராமன் மூலமாக தான் ஜெயவேலுவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பம் உண்டானது. உமா அவரது கணவருடன் சேர்ந்து ஒரு பிராஜக்ட் செய்து வந்தார். சென்னை தெருக்களில் வாழும் குழந்தைகளை பற்றியது அந்த பிராஜக்ட்.

1999-ல் உமா முத்துராமன் ஜெயவேலுவை பள்ளியில் சேர்த்தார். ஜெயவேலுவின் வாழ்க்கை பாதை மாறியது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் ஜெயவேலு. 12-ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கினார்.

பின்னர் இவராகவே கேம்பிரிட்ஜ் பல்கலைகழக அனுமதி தேர்வை பாஸ் செய்தார். வேல்ஸ்-ல் உள்ள க்ளைன்ட்வர் (Glyndwr) பல்கலைக்கழகதில் சீட் கிடைத்தது.

செயல்திறன் கார் விரிவாக்கம் தொழில்நுட்ப பொறியியல் கோர்ஸ் படித்தார் ஜெயவேல். இந்த படிப்பு ரேஸ் கார் செயல்திறன் மேம்பாடு குறித்து ஆகும்.

இப்போது, தனது மேற்படிப்பை தொடர இத்தாலி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் ஜெயவேல்.

இனிமேலும், நீங்கள் வாழ்க்கை / கடவுள் உங்களை சோத்தித்துவிட்டார் என புலம்ப போகிறீர்களா? ஜெயவேலுவை விடவா உங்கள் வாழ்வில் பெரும் பிரச்னை, சிக்கல் வந்துவிட்டது.

முயற்சி ஒன்று போதும், எதையும் எட்டிப்பிடிக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் ஜெயவேல்!