Breaking News

இரு ஆண்களின்உயிரணுவில் இருந்தும் கருவினை உருவாக்கலாம் !!!

அம்மா இல்லாமல் ஒரு குழந்தை. நினைத்து பார்க்க முடிகிறதா? ஆம். அறிவியல் அதை சாதித்துள்ளது.

ஒரு குழந்தை பிறப்பதற்கு பெண்ணின் கருமுட்டைகளுடன்,ஆணின் ஒடுங்கு தன்மையுள்ள விந்தணுக்கள் சேரும்போது தான் குழந்தை கருவாக உருவாகிறது.
ஆனால் தற்போது பாத் பல்கலைக்கழகம் தனது 200ஆண்டுகால உயிரியல் பயிற்றுவிக்கும் அனுபவத்தைக்கொண்டு, அந்த கொள்கையை மாற்றி எழுதியுள்ளது.

அதாவது பெண்ணின் கருமுட்டை இல்லாமலேயே இரண்டு ஆண்களில் இருந்து எடுக்கப்பட்ட கரு உருவாக காரணமாக இருக்கும் டிஎன்ஏக்களை பிரித்து, அவைகளை சாதகமான சூழலில் கருவுற வைக்க முடியும் என்று கண்டுபிடித்து புதிய விதியை எழுதியுள்ளனர்.

இதுகுறித்து பாத் பல்கலையின் பேராசிரியர் டாக்டர் டோனிபெர்ரி கூறும்போது,
உங்களின் தோல் செல்களை பிரித்தெடுத்து அதிலிருந்து கரு உருவாக்கம் செய்வதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். இதுவே அனைத்து உயிரின தோற்றத்துக்கும் அடிப்படையானது.

இதுவரை பெண் கருமுட்டைகள் மட்டுமே, கருத்தரித்தலுக்கான மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற கருத்து இருந்தது. காரணம் பெண் கருமுட்டையில் இருந்து வரும் குரோசோம்களில் இருந்து பாதியாக குறைக்கப்பட்டும், அதேபோல ஆண் விந்தணுக்களில் இருக்கும் குரோசோம்கள் பாதியாக ஒடுக்கப்பட்டு பாதி குரோமோசோம்களும் கருவில் இணைக்கப்படுகிறது. இவ்வாறு இணைந்து உருவாக்கப்பட்ட கருவில் ஒரு மனிதனுக்குத்தேவையான டிஎன்ஏக்கள் மட்டுமே பரிமாறப்பட வேண்டும். இந்த மாற்றங்கள் பெண் கருமுட்டையில் மட்டுமே நடக்கும் அறிவியல் செயலாக இது வரை கருதப்பட்டது.


ஆனால், தற்போது அந்த கருத்து உடைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய முறையில் கருத்தரித்தலுக்கான முயற்சியில் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இனிமேல் தாய் இல்லாத குழந்தைகளும் பிறக்க வைக்க முடியும் என்கிறார்.

அறிவியல் பூர்வமாக இது வெற்றி எனினும்,தாய் இல்லாத ஒரு குழந்தையை இந்த உலகில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நாமும் அந்த குழந்தையாக இருந்து சிந்தித்து பார்க்கும்போது இந்த உலகம் எமக்கானது இல்லை என்று உள் மனம் பாடம் சொல்கிறது.