Breaking News

Dropbox ஹெக் செய்யப்பட்டதனால் 68 மில்லியன் பயனாளர்கள் பாதிப்பு

இரண்டு வாரங்களுக்கு முன்னர் Dropbox பாவனையாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளுடன் கடவு சொற்களும் குறிப்பிடப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியாகியதன் மூலம் வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை இணையத்தில் சேமிக்கும் சேவையை வழங்கி வரும் சுமார் 50 கோடி பயனாளர்களை கொண்ட Dropbox நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இச் சைபர் தாக்குதலை Dropbox நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மேலும் 68 மில்லியன் பயனாளர்களின் தகவல்களை திருடியது யார் என்ற விபரம் இதுவரை கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் passwordகள் திருடப்பட்டிருந்தாலும், இதுவரையிலும் கணக்குகளுக்குள் ஊடுருவி எவ்வகையான தகவல்களும் மாற்றம் செய்யப்படவில்லை என Dropbox நிறுவனம் தெரிவித்துள்ளது.