Breaking News

தல பெயர் சூட்டப்படும் தளபதி படம்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்60 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதே கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு. அந்த பரபரப்பில் பட்டாசு கொளுத்தி போடும் விதமாக டைட்டில் வைக்கப்படுகிறது.
இந்தப் படத்தை பிரபல நாகிரெட்டி குடும்பத்தினர் தயாரிக்கிறார்கள். இவர்கள் தீவிர விநாயகர் பக்தர்கள். இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் பெயரை அறிவிக்க உள்ளனர். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அன்று வெளியாகிறது.. அதெல்லாம் சரி.. ப்டத்தின் தலைப்பு என்னப்பா என்கிறீர்களா… விநாயகர் பக்தர் தயாரிக்கும் படம் என்பதால், செண்டிமெண்ட்டாக விநாயகம் என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.
அட, விநாயகம் தலைப்பு சூப்பராக இருக்கிறது. இதில் எங்கு அஜீத் வந்தார் என்கிறீர்களா.. அஜீத் நடிப்பில் வெளிவந்த வீரம் படத்தில் அஜீத்தின் பெயர் விநாயகம் என்பது மறந்து விட்டதா… அட தளபதி படத்துக்கு தல கேரக்டரின் பெயரா…