Breaking News

குழந்தைகள் விரும்பும் EGG 65

சிக்கன் 65 கேள்விபட்டிருப்பீர்கள்  EGG 65 கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி இப்போது  EGG 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம்.






தேவையான பொருட்கள் :

முட்டை - 4
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
சோள மாவு - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை :

* முட்டையை வேகவைத்து, சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். (ஒரு முட்டையை இரு பாதிகளாக வெட்டிக்கொள்ளலாம்)

* சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் தூள், கறிவேப்பில்லை ஆகியவற்றை மிக்சியில் போட்டு மையாக அரைத்துகொள்ளவும்.

* இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

* வேகவைத்த முட்டை துண்டுகளின் மீது இந்த மசாலா கலவையை பூசி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும். 

* சூப்பரான எக் 65 ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.