Breaking News

குத்துப்பாடல் ஹிட்டானதால் கடுப்பாக்கிய காஜல் !!!

காஜல் அகர்வால் தமிழில் அஜீத் ஜோடியாகவும், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாகவும் நடித்து வருகிறார். தவிர மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க பேசி வருகிறார். முன்னதாக ஜூனியர் என்டிஆருடன் ‘ஜனதா கேரேஜ்’ படத்தில் அவர் குத்தாட்ட பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவர் புரமோஷனுக்கு வராததால் விளம்பரத்தில் காஜலுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டது. 

எதிர்பார்த்தபடி பாடல் ஹிட்டானது. இது பட குழுவினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் காஜல் அகர்வாலுக்கு கடுப்பேற்றியிருக்கிறது. அரைகோடிக்கு அதிகமாக சம்பளம் வாங்கிக்கொண்டு காஜல் ஆடியிருந்தாலும் அடுத்தடுத்து அவருக்கு வரும் படங்களில் ஹீரோயின் வேடம் தவிர்த்து குத்து பாடலுக்கு ஆடவே வாய்ப்புகள் குவிகிறதாம். 

இதனால் கோபம் அடைந்தவர் ஏன்தான் குத்து பாடல் ஹிட்டானதோ என்று நொந்துபோயிருப்பதுடன் இனிமேல் குத்து பாடலுக்கு ஆட மாட்டேன் என்று கூறி வருகிறார். தெரியாமல் அவரிடம் யாராவது, ‘நீங்கள் ஆடிய ஐட்டம் ஸாங் நன்றாக இருந்தது’ என்று கூறினால் உடனே எரிச்சல் அடைந்தவராய், ‘அது ஐட்டம் சாங் இல்லை, ஸ்பெஷல் சாங்’ என்கிறாராம்.