Breaking News

எயிட்ஸ் நோயாளர்களுக்கு இலவச சிகிச்​சை !!

இதுவரையிலும் சர்வதேச நிதியத்தின் நிதி உதவியில் தெரிவுசெய்யப்பட்ட HIV தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாத்திரம் சிகிச்சையளிக்கப்படமைக்கு பதிலாக நாட்டில் உள்ள HIV தொற்றுக்குள்ளான சகலருக்கும் இலவச சிகிச்சையினை வழங்கும் திட்டத்தினை நடைமுறை படுத்த உள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

.அத்துடன் இளைஞனர் யுவதிகளுக்கான சுகாதார திட்டமொன்றை நெறிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்த   சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹீபால அத்துடன் பாடசாலை பாடவிதானங்களிலும் பாலியல் தொடர்பான அறிவினை மாணவர்களுக்கு வழங்குதல் அவசியம் எனவும் இலங்கையில், HIV மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வறிக்கை வெளியிடும்  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்தார்.