Breaking News

சீனாவில் ஒரே நாள் இரவில் காணாமல் போன பாலம் !!

சீனாவில் ஒரே நாள் இரவில் 500 மீற்றர் பாலம் தகர்க்கப்பட்டதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

சீனாவின் தெற்கே அமைந்துள்ள நஞ்சாங் பகுதியில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்னர் 500 மீற்றர் தொலைவில் போக்குவரத்துக்காக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது சீனாவில் வாகனங்கள் பெருகிவிட்டதால், அப்பாலத்தை இடித்து புதிதாக பாலம் கட்ட திட்டமிட்டிருந்தனர்.

அதற்கான விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பால அமைப்புகள் மற்றும் எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான திட்டம் அனைத்தும் நிறைவு பெற்றதால், தற்போது அந்த பாலத்தை தகர்த்துள்ளனர்.

சுமார் 500 மீற்றர் தொலைவு கொண்ட இப்பாலத்தை இடிப்பதற்கு அவர்கள் ஒரே நாள் இரவு தான் எடுத்துக்கொண்டனர்.

பாலத்தை தகர்ப்பதற்கு 69 ராட்சத பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டது. இப்பாலத்தை இடிப்பதற்கு பொக்லைன்கள் சில மணி நேரம் தான் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

மறு நாள் காலையில், அங்கு மேம்பாலம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. வெறும் குப்பைகளைப் போன்ற இடிபாடுகள் மட்டும் காணப்பட்டதைப் பார்த்து, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு Beijing's Sanyuan பாலத்தை 43 மணி நேரத்திலும், இதே ஆண்டு மார்ச் மாதம் 53 மாடி கட்டிடத்தை 19 நாட்களிலும் கட்டி முடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.