Breaking News

பிரபுதேவா-தமன்னாவின் 'தேவி' படத்தின் தணிக்கைத் தகவல்கள்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்சார் அதிகாரிகள் இந்த படத்தின் எந்த காட்சியையும் கட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் டைட்டில் உள்ளதாலும், 'யூ' சர்டிபிகேட்டை பெற்றுள்ளதாலும் இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவாவின் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார்