Breaking News

2016ஆம் ஆண்டின் பிரமிக்கவைக்கும் அதிசிறந்த 5 கண்டுபிடிப்புகள் !!!

இந்த நூற்றாண்டில் தொழிநுட்ப வளர்ச்சி என்பது மிகவும் அபரீதமானது. செல்போன் உள்பட பல கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலோ, ஒரு புத்தகத்தை படிக்க வேண்டும் என்றாலோ, ஒரு பில்லை கட்ட வேண்டும் என்றாலோ பல கிமீ தூரம் போக வேண்டும், வரிசையில் நிற்க வேண்டும் என பல உபாதைகள்.

ஆனால் இன்று உட்கார்ந்த இடத்திலேயே கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து நாம் அனைத்து பணிகளையும் நொடிப் பொழுதில் முடித்து விடுகிறோம்.

வளர்ச்சி அடைந்த விஞ்ஞானத்தால் ஒருசில தீமைகள் இருந்தாலும் பொதுவாக மனித வாழ்க்கையை இந்த விஞ்ஞானம் எளிமை ஆக்கிவிட்டது என்பது தான் உண்மை. மேலும் ஒரு சில விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மிகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும், நம்ப முடியாத வகையிலும் பெரும் புதிராகவும் இருக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் ஒருசில அதிசயமான, புதிரான கண்டுபிடிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்.

இது அலாரம் அடிக்கும். ஆனால் எழுப்புவதற்காக மட்டும் அல்ல.. (SensorWake, the Olfactory Alarm Clock)

 செல்போன் முதல் கடிகாரம் வரை எத்தனையோ விதவிதமான அலாரங்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த அலாரங்கள் நீங்கள் தூங்கும்போது உங்களை எழுப்ப மட்டுமே பயன்படும். ஆனால் மேலே உள்ள படத்தில் காணப்படும் இந்த சென்சார் அலாரம் கிளாக் உங்களி தூக்கத்தில் இருந்து எழுப்புவது மட்டுமின்றி உங்களுக்கு தேவையான உணவுகள், பானங்கள், காபி, டீ, மற்றும் பல விஷயங்களுக்காக இந்த சென்சார் அலாரம் கிளாக் உங்களுக்கு உதவும்

எஹாங் 184. ஏரியல் வாகனம் (Ehang 184, Aerial Vehicle)

 சீன விஞ்ஞானி எஹாங் என்பவர் கண்டுபிடித்த இந்த ஏரியல் வாகனத்திற்கு அவருடைய பெயரே வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் டிரோன் போன்றதுதான். ஒரே ஒரு சிங்கிள் மனிதரை மட்டும் ஏற்றி கொண்டு செல்லும் வல்லமை உள்ள இந்த ட்ரோன், மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு டிரைவர் எல்லாம் தேவையில்லை. இதற்கென உள்ள செயலியை நீங்கள் இயக்கி விட்டால் போதும். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அந்த செயலி அந்த ட்ரோனை இயக்கும்

ஸ்மார்ட்டர் பிரிட்ஜ் கேமிரா: (Smarter’s FridgeCam)

 பிரிட்ஜ் தெரியும், அது என்ன பிரிட்ஜ் கேமிரா என்று நீங்கள் மைண்ட் வாய்சில் பேசுவது கேட்கின்றது. பிரிட்ஜில் நீங்கள் என்னென்ன வைத்துள்ளீர்கள் என்பதை நீங்கள் பிரிட்ஜை திறந்து பார்த்த தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த கேமிராவை பிரிட்ஜில் பிக்ஸ் செய்துவிட்டு உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்ஸ் மூலம் பிரிட்ஜில் என்னென்ன இருக்கின்ற்து என்பதை தெரிந்து கொள்வதோடு, அந்த பொருட்களின் எக்ஸ்பைரியையும் அது உங்களுக்கு ஞாபகப் படுத்தும். என்ன இந்த ஆண்டின் அதிசய கண்டுபிடிப்புதானே இது?

ஸ்மார்ட் குடை என்றால் என்ன? (Davek Alert Smart Umbrella)

 அழகழகான வண்ண வண்ண குடைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அல்லது வாங்கியிருப்பீர்கள். ஆனால் அலர்ட் ஸ்மார்ட் குடையை பார்த்திருப்பீர்களா? இந்த குடையில் ஒரு சின்ன சிப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சிப் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப் மூலம் இணைக்கப்படும். நீங்கள் குடையை மறந்து எங்காவது வைத்து விட்டாலோ, அல்லது மழைக் காலங்களில் குடையை எடுக்க மறந்து விட்டாலோ இந்த ஆப் உங்களுக்கு செய்தியை அனுப்பி ஞாபகப்படுத்தும். இந்த குடை உங்களுக்கு நிழலை மட்டும் தருவதில்லை, நிம்மதியையும் தரும்

இதுதான் ஸ்மார்ட் ஹெல்மெடி (Daqri Smart Helmet) 

இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் உங்கள் தலைக்கு பாதுகாப்பை மட்டும் கொடுப்பதில்லை. உங்களுக்கு முன் இருக்கும் பொருள்களின் தன்மையை அறியவும் பயன்படும் ஒரு அற்புதமான, பயனுள்ள பொருள்