Breaking News

பிள்ளை பிறந்து விட்டது பெயர் வைபதில் தாமதம் !!

மஹிந்தவை தலைவராகக்கொண்ட புதிய அரசியல் கட்சியைப் பொறுத்தவரையில் 'பிள்ளை பிறந்து விட்டது பெயர் வைப்பதே தாமதம்' என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.   உள்ளூராட்சித் தேர்தலானது அநேகமாக  2017ம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறலாம் என்னும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சி தொடர்பில் நேற்றைய தினம் விளக்கமளித்துள்ள விமல் வீரவன்ச புதிய கட்சிக்கான கட்டமைப்புப் பணிகள்யாவும் நிறைவடைந்துள்ளதாகவும் பெயர் வைப்பது மாத்திரமே மீதமிருப்பதாவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.