Breaking News

இறுதி ஓவரில் இறுதி பந்தில் விக்கெட் வீழ்த்திய பெருமையுடன் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டின் விடை பெற்றார் !!

தோல்வியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து டில்ஷான் ஓய்வு!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2வது T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று தனதாக்கி கொண்டது

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி முதலில் ஆட்டிய இலங்கை அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், மறுபுறம் தனித்து நின்று போராடிய தனஞ்சய டி சில்வா அரைச்சதமடித்து அணியைக் காப்பாற்ற இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது

இன்று தனது இறுதி சர்வதேசப் போட்டியில் விளையாடிய டில்ஷான் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து போட்டியில் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியிலும் மெக்ஸ்வெல் வானவேடிக்கை நிகழ்த்தியிருந்ததுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, டெஸ்ட் தொடரை 3-0 என்று இழந்த அவுஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 4-1 என்றும், T20 தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து வெளியேறிய டில்ஷான் இன்றைய போட்டியுடன் சகல விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்

தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடிய திலகரட்ன தில்ஷான் துடுப்பாட்டத்தில் ஒரு ஓட்டத்தையே பெற்றார். ஆனால். பந்துவீச்சில் அவர் 2 ஓவர்களில் 8 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்..

இப்போட்டியில் அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடிய போது 15 ஆவது ஓவரில் டில்ஷான் பந்துவீசக் களமிறங்கினார். அந்த ஓவரின் கடைசி பந்தில்  உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்கச் செய்தார் டில்ஷான்

பின்னர் 17 ஆவது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த டில்ஷான், அந்த ஓவரின் கடைசி பந்தில் மத்தியூ வாட் ஆட்டமிழந்தார்.