Breaking News

இனி கவலையில்லை ! வாட்ஸ்ஆப் உபயோகிக்க நம்பர் வேண்டாம்..!

உங்கள் தனிப்பட்ட  நம்பர் கொடுக்காமல், அதுவும் நீங்கள் வெளிநாட்டவர் போல காட்டிக்கொள்ளலாம். வெளிநாட்டு மொபைல் என் வைத்திருந்தால் நீங்கள் வெளிநாட்டவர் தானே. மேலும் உங்கள் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்தால், உங்கள் வெளிநாட்டு நம்பருக்கு அவர்கள் call செய்தால், உள்நாட்டு கட்டணம் மட்டுமே செலவாகும். ஒரே கல்லில் இரண்டு மூன்று மாங்காய்.

பிரிமோ (Primo) என்ற ஆப்பை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து, அதில் உங்களுக்கான அமெரிக்கா, கனடா போன்று எந்த நாட்டு மொபைல் நம்பர் வேண்டுமோ பெற்றுக்கொள்ளுங்கள். மேலும் முந்தைய செய்தியில் கூறியது போலவே, Parallel Space பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்பை பயன்படுத்தி இரண்டு வாட்ஸ்ஆப் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இரண்டாவது வாட்ஸ்ஆப்பில் உங்கள் வெளிநாட்டு நம்பரை கொடுத்து, பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதனால் நீங்கள் விரும்பிய வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்து கொள்ளலாம்.