Breaking News

சிகாகோ விமான நிலையத்தில் விமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து !!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது. 

161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன் இந்த விமானம் டேக் ஆப் செய்யவும் தீடிரென விமானத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக உஷார் ஆன விமானி விமானத்தை நிறுத்தினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டதும் அவசர அவசரமாக  பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். 

வேகமாக வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் 20 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானம் தீ பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விமான போக்குவரத்து ஆணையமும், விமான நிறுவனமும் முரண்பட்ட தகவலை வெளியிட்டன. என்ஜீன் கோளாறால் தீ பற்றியதாக ஒரு தகவலும் டயர் வெடித்ததால் தீ பற்றியதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவின் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றான ஓ’ஹரே விமான நிலையத்தில் இந்த சம்பவத்தால் விமான சேவையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மாலையில் மியாமி நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.