Breaking News

புற்றுநோயைக் குணப்படுத்தும் வைரஸ் மலேசியாவில் கண்டுபிடிப்பு !!!

மலேசிய அறிவியல் அகடமியைச் சேர்ந்த நிபுணத்துவ ஆய்வுக்குழுவினர் புற்றுநோயைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இக்குழுவில் மலேசிய இந்திய விஞ்ஞானியான டாக்டர் அபிமன்யுவும் இடம்பெற்றுள்ளார்.

இன்நிபுணத்துவ குழு கண்டுபிடித்த இவ்வைரசானது, புற்று நோய் செல்களை முழுமையாக அழிக்கும் வல்லமை கொண்டது என இக்குழுவில் இடம்பெற்றுள்ள மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் ஜினடிக் ஆய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

“இந்த வைரஸ் அனைத்து விதமான அபாயகரமான புற்றுநோய் செல்கள் மீது சோதனை செய்யப்படும். இது போன்ற ஆய்வு இதுவரை உலகிலுள்ள எந்த ஆய்வாளர்களும் இதுவரை மேற்கொள்ளவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளில், இந்த வைரஸ் புற்றுநோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்படும்” என விஞ்ஞானி டாக்டர் அபிமன்யு வீரகுமாரசிவம் தெரிவித்தார்.